Exclusive Today Trending சினிமா

“பார்த்து நடந்துக்கோங்க முருகதாஸ் தம்பி” – தர்பார் விவகாரத்தில் டி.ஆர் பகீர்

ரஜினியின் தர்பார் திரைப்படம் நஷ்டம் அடைந்ததால், தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் டி.ராஜேந்திரனிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தர்பார். ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம், மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அப்படத்தின் விநியோகஸ்தர்கள் முறையிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி.ராஜேந்திரன், “அடிப்படையில் நானும் ஒரு விநியோகஸ்தர் தான் என தெரிவித்து பேச்சை தொடங்கினார். விநியோகஸ்தர்கள் ஒன்றும் நடிக்க வரவில்லை நஷ்டம் அடைந்ததால் தான் வீட்டு வாசலில் வந்து நின்று வருத்தப்படுகிறார்கள். மேலும், ரஜினி தனது நண்பர், நான் இதை பற்றி சரியான இடத்தில் பேச காத்துக்கொண்டிருந்தேன்” என்று கூறினார்.

மேலும். விநியோகஸ்தர்கள் பொய் கூறுகிறார்கள் என்ற பிம்பம் பரவுகிறது. அதனால் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு. அதேபோல் விசாரித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றார். சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக நான் இதை கண்டிப்பாக கேட்டாக வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை விமர்சனம் செய்த டி.ஆர், “பார்த்து நடந்துக்கோங்க முருகதாஸ் தம்பி” என எச்சரிக்கையும் விடுத்தார்.

தர்பார் பட விநியோகஸ்தர்கள் சார்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் பற்றி இதுவரையில் எந்த சங்கத்தின் சார்பிலும் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது சரியான முறையில் விசாரிக்கப்பட்டு வினியோகஸ்தர்கள் லாபம் அடைய வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என்றார். மேலும் நடிகர் விஜய் படப்பிடிப்பின் போது வருமானவரித் துறையினர் அழைத்து சென்றத பற்றி யாரும் எதுவும் கூற முடியாது. இந்த கட்டமைப்பில் நானும் இருக்கின்றேன். அதை பற்றி விமர்சனம் செய்வது முறையல்ல என்று கருதுவதாகவும் டி,ஆர்,குறிப்பிட்டார்.

Related posts

இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ராம்ப்

Digital Team

நம்பிக்கை தருவதே நல்லரசு – CAA குறித்து வைரமுத்து ட்வீட்!

superadmin

காவிரி – கோதாவரி நதிகள் இணைப்பு : விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயார்

Digital Team

சிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்தார் என்பது வதந்தி – சென்னை மாநகர போலீஸ் விளக்கம்

Digital Team

லைகா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம்…!

superadmin

காவலர் தேர்வு முறைகேடு; சிபிசிஐடி விசாரணைக்கோரி வழக்கு

Digital Team
You cannot copy content of this page
Madhimugam