டி-20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடிப்பார் – பிராட் ஹாக்

T-20 கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பல வீரர்கள் இரட்டை சதம் அடித்துள்ளனர். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் எந்த வீரராலும் இரட்டைசதம் அடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர், 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடிக்க போகும் வீரர் யார்?, அவர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்துள்ள பிராட் ஹாக், “என்னை பொறுத்தவரை தற்போதைய வீரர்களில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சதம் அடிக்கும் தகுதி படைத்த வீரர், இந்தியாவின் ரோகித் சர்மா மட்டுமே என்றும், பலவிதமான ஷாட்டுகள் மூலம் மைதானத்தின் எல்லா புறங்களிலும் சிக்சர், பவுண்டரிகளை விளாசுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

What do you think?

மத்தியபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மிரட்டும் கொரோனா; வெறிச்சோடிய சென்னை!