அழகு குறிப்புகள்..!
கடலை மாவு, பால் ஏடு, கஸ்தூரி மஞ்சள்தூள் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி காயவிட்டு அலசி வர முகம் பளப்பளவென்று மாறும்.
அரிசி களைந்த நீரை கொண்டு முகத்தை கழுவி வர முகத்தில் அழுக்குகள் நீங்கி, அதிகமாக இருக்கும் எண்ணெய் பசை மற்றும் கரும்புள்ளிகளும் மறையும்.
எள்ளை அரைத்து அதில் சாறு எடுத்து அதில் பயித்தம் மாவு சேர்த்து கலந்து முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறையும்.
தக்காளி சாற்றை எடுத்து அதில் மஞ்சள்தூள் கலந்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு அலசி வந்தால் சருமத்தின் நிறம் கூடும்.
ரவை 2 ஸ்பூன் எடுத்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து உதட்டில் மசாஜ் செய்து வர உதட்டில் இருக்கும் வெடிப்புகள் மறையும்.
நகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து நகம் வெட்டினால் உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டலாம்.