ஆரோக்கியமான கம்பு அடை காலை உணவு..!
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு 2 கப்
எண்ணெய் தேவையானது
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
வெங்காயம் 1
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
வறுத்த வேர்கடலை 1/2 கப்
பச்சை மிளகாய் 2
உப்பு
தேங்காய் துருவல் 1/2 கப்
முருங்கைக்கீரை சிறிது
கொத்தால்லி இலை சிறிது
செய்முறை:
ஒரு வாணலில் கம்பு மாவினை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
அதில் தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரை கப் தேங்காய் துருவல், வறுத்த வேர்க்கடலை கால் கப், இரண்டரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும்.
நீர் கொதி வந்ததும் வறுத்த கம்பு பொடியை சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
தண்ணீர் நன்றாக சுண்டி மாவு கலந்ததும் அடுப்பை அணைத்து மாவினை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
மாவு லேசாக ஆறியதும் அதில் உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் போட்டுக் கொண்டு பின் நறுக்கிய முருங்கைக்கீரை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்துக் கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் கைகளை ஈரம் செய்துக் கொண்டு மாவினை லேசாக பிசைந்து பின் அடை செய்ய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாழை இலையில் ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து அடை போல தட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி அதில் அடையை போட்டு லேசாக எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
இதுபோல மற்ற உருண்டைகளையும் தட்டுக் கொள்ள வேண்டும்.
சட்னிக்கு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, வரமிளகாய், பூண்டு 2 பல், உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொண்டு பின் தாளிக்க வேண்டும்.
அவ்வளவுதான் கம்பு அடை மற்றும் தேங்காய் சட்னி தயார்.