அசத்தலான பாட்டி வைத்தியம் பார்க்கலாமா..?
கண்வலி வராமல் தடுக்க:
எள் செடியின் பூவை பற்களில் படாமல் விழுங்க வேண்டும். பூக்களின் என்ணிக்கைக்கு ஏற்ப அத்தனை வருடங்களுக்கு கண் வலி வராது.
தொண்டை கரகரப்பு நீங்க:
பூவரசன் வேரை எடுத்து கசாயம் செய்து வாயை கொப்பளித்து வர தொண்டை கரகரப்பு நீங்கும்.
இரத்த கொதிப்பு குணமாக:
இரத்த கொதிப்பை தடுக்க வாரம் இருமுறை அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தலைவலி குணமாக:
குப்பைமேனி சாறு நெற்றியில் தடவி வர தலைவலி குணமாகும்.
சொறி சிரங்கு குணமாக:
கீழாநெல்லி இலையை உப்பு சேர்த்து அரைத்து உடல் முழுக்க தேய்த்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.
சளி மூக்கடைப்பு தீர:
நெல்லிக்காய் பொடி மற்றும் கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.
இரத்தம் உறைதல் சரியாக:
நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் உறைதல் சரியாகும்.
கக்குவான் இருமல் குணமாக:
நாயுறுவி கதிர், சீயக்காய் 1, மஞ்சள் துண்சு 1 ஆகியவற்றை சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை மற்றும் மாலை என குடித்து வரலாம்.
இரத்தத்தை சுத்திகரிக்க:
இஞ்சி சாற்றை தேனுடன் சேர்த்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
குழந்தைகளுக்கு கண் சூடுதனிய:
நெல்லிக்காய் சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்து வர கண் சூடு சரியாகும்.