பாட புத்தகத்தில் தமன்னா.. வா..? கடுப்பான பெற்றோர்..! தனியார் பள்ளி மீது திரும்பிய..?
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் தமன்னா தற்போது புதிய சர்ச்சையை கிளப்பி வருகிறார். அது என்ன என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தமன்னா பல ஹிட் படங்களை கொடுத்தாலும் ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல்களால் பட்டிதொட்டி எங்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அறியப்பட்ட இவர் அதனை தொடர்ந்து சமிபத்தில் வெளியான அரண்மனை 4ல் இவர் ஆடிய
அச்சோ அச்சோ அச்சச்சோ அச்சோ மச்சோ மச்சோச்சோ உச்சமுல்ல மச்சமெல்லாம் பத்திகிச்சோ..
பாடல் மூலம் மீண்டும் பிரபலமான இவர் சினிமாவில் வெற்றியை நோக்கி பயணித்திருந்தால் புகழின் உச்சிக்கு சென்றிருப்பார் ஆனால் இவரை பற்றி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறி பேசு பொருளாக பரவி வருகிறது.
அதாவது கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஹெப்பாலில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பிற்கு வழங்கப்பட்ட பாடத்தில் சிந்திகள் பற்றிய அத்தியாயம் ஒரு பாடமாகவே இடம்பெற்று இருக்கிறது.
“பிரிவினைக்குப் பின் வாழ்க்கை: சிந்துவில் இடம்பெயர்வு 1947 முதல் 1962 வரை” என்ற தலைப்பில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. சிந்தி பிரிவினர் மொழியியல் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்து அதில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தமன்னா குறித்த கருத்துகள் இருப்பதே சர்ச்சைக்குக் காரணம்.
அதில் தமன்னா பிறந்த தேதி, இவர் நடித்த திரைப்படங்கள் மற்றும் அவரது நடிப்பு திறமை ஆகியவை இடம் பெற்றிருப்பதால் பாடப்புத்தகத்தில் இடம்பெறும் அளவிற்கு என்ன சாதித்து இருகிறார் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன
பெற்றோர்கள் எதிர்ப்பு:
இது தொடர்பாகப் புகார் அளித்த பெற்றோர்களில் ஒருவர் கூறுகையில், “எங்கள் குழந்தைகள் மற்றொரு கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் எங்களுக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை..
ஆனால் 7ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு நடிகையைப் பற்றி பாடம் இருப்பது ஏன்.. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்” என்று கூறியதால் இது தொடர்பாகப் பிரச்சினை செய்தால் டிசி கொடுத்துவிடுவோம் எனப் பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாகவும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர்கள் மேலும் கூறுகையில், “திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய பிரபலங்கள் குறித்து எங்கள் குழந்தைகள் தாராளமாகப் படிக்கலாம். அதில் தவறு இல்லை.
ஆனால் இதுபோல நடிகையைக் குறித்துத் தெரிந்து கொண்டால், பிறகு அவர்கள் இணையத்தில் இது குறித்துத் தேடுவார்கள். இதனால் அவர்கள் தேவையில்லாத கண்டெண்டுகளை பார்க்க நேரிடலாம்” என்று அவர் தெரிவித்தார்.
என்ன செய்ய வேண்டும் :
இது தொடர்பாக விவரம் அறிந்த சிலர் கூறுகையில், “பள்ளி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்த பிறகு கூடுதலாக எதாவது ஒரு விஷயத்தைச் சேர்ப்பதாக இருந்தாலும் சரி, அதை நீக்குவதாக இருந்தாலும் சரி அதற்கு அந்த பள்ளி இருக்கும் வாரியம் முதலில் அங்கீகரிக்க வேண்டும்.
எனவே, முதலில் பெற்றோர் அந்த வாரியத்திடம் இது தொடர்பாகப் புகார் அளிக்க வேண்டும்” என்றார்.
-பவானி கார்த்திக்