கார்த்தி பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா..!!
“ஜப்பான்” திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கார்த்தியை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் மற்றும் கார்த்தியுடன் இனணந்து பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் சத்தியராஜ், கார்த்தியை பெருமையாக பேசினார். கோயம்புத்தூரில் இருந்து நான் முதலில் நடிக்க வந்தபோது சிவக்குமார் அண்ணன் தான் எனக்கு நம்பிக்கையாக இருந்தார். அந்த சமயம் தான் கார்த்தியும் பிறந்தார். சூர்யாவும் கார்த்தியையும் அழைத்து கொண்டு, அருகில் உள்ள கடைக்கு சென்று ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தந்த அனுபவத்தையும் பகிர்ந்தார்.
எம்.ஜி.ஆர் நடிக்க வந்த பிறகு பல தொழில்நுட்ப வேலைகளை அறிந்துக்கொண்டார். ஆனால் கார்த்தி பல தொழில்நுட்ப வேலைகளை கற்றுக்கொண்டு தான் நடிக்கவே வந்தார்.
எம்.ஜி.ஆர் நடிக்க மிகவும் ஆசைப்பட்ட கதாப்பாத்திரம் வந்தியதேவன் கதாப்பாத்திரம், எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் வந்தியதேவனாக நடித்த கார்த்திக்கு ஏராளமான பரிசுகளை அளித்திருப்பார். ஜப்பான் படத்தில் ராஜுமுருகன் சில சமூக தத்துவங்களை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடித்து பேசிய நடிகை தமன்னா, கார்த்தியினால் தான் நான் தமிழ் கற்றுக்கொண்டதாக நெகிந்து கூறினார். நடிகர்களாகிய நாங்கள் சினிமாவின் மாணவர்கள் எனவும் மக்களுக்காக தான் புது புது கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருவதாக பேசினார்.
அதை தொடர்ந்து “”அடடா மழைடா”” என்ற பாடலுக்கு கார்த்தியுடன் சேர்ந்து நடனமாடினார்.
கார்த்தியை முதன்முதலாக பாடவைத்த பெறுமைக்குரிய யுவன் சங்கர் ராஜாவுடன் கார்த்தி சேர்ந்து பாடல் பாடி மகிழ்ந்தனர். இதையடுத்து பேசிய நடிகர் ஆர்யா கார்த்தியின் 25வது படத்துக்கு வெற்றி சதவீதம் அதிகமாக உள்ளதாகவும் கூறினார். கடைசியாக மித்ரன். ஜெயம் ரவி, விஷால், திலீப் சுப்புராயன் ஆகியோரும் கார்த்தியை பற்றி நெகிழ்ந்து பேசினார்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..