தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்பு

துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார், அதில் அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு.

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க 12 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 181 கோடி ரூபாயும், தொழில் துறைக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், தொழிலாளர் நலன்துறைக்கு 200 கோடி ரூபாயும் தமிழக நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப துறைக்கு 153 கோடி ரூபாயும், சென்னை-பெங்களூரு தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில் முனைய மேம்பாட்டுத் திட்டம் அமைக்கவும் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறைக்கு 5 ஆயிரத்து 52 கோடி ரூபாயும், சுகாதாரத்துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடி ரூபாயும். சமூக நலன் மற்றும் மதிய உணவு திட்டதிற்கு 5 ஆயிரத்து 935 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறைக்கு 11 ஆயிரத்து 894 கோடி ரூபாயும், கால்நடை துறைக்கு 199 கோடி ரூபாயும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்துக்கு 100 கோடி ரூபாயும், நெடுஞ்சாலைத்துறைக்கு 5 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், போக்குவரத்து துறைக்கு 2 ஆயிரத்து 716 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறைக்கு 20 ஆயிரத்து 115 கோடி ரூபாயும், கைத்தறி துறைக்கு ஆயிரத்து 224 கோடி ரூபாயும் தமிழக நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

What do you think?

மோடி-டிரம்ப் சந்திப்பில் புதிய ஒப்பந்தங்கள்?

தமிழக பள்ளிகளில் 171 பாலியல் வன்முறை – அதிர்ச்சி ரிப்போர்ட்