ஒன்றிய பட்ஜெட்டில் வஞ்சிக்கபட்ட தமிழ்நாடு..! திமுக கண்டன ஆர்பாட்டம்..!
ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை டாடாபாத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து வெளியிட்ட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பில், பீகாருக்கும் ஆந்திராவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு போன்ற இண்டியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. இந்த நிலையிலே, பாரபட்சமுடன் நடந்துகொள்வதாக ஒன்றியத்தில் ஆளும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலே, கோவையில் திமுக தலைமை கழக அறிவிப்பின் அடிப்படையில், ஒருங்கிணைந்த திமுக சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு பாஜக ஆளும் ஒன்றிக அரசாங்கத்துக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாட்டை பாரபட்சம் பார்த்து வஞ்சிப்பதாக தெரிவித்த அவர்கள், வரி வசூல் செய்யும் ஒன்றிய அரசாங்கம் நிதி பகிர்ந்து தருவதில் ஏன் பாரபட்சம் என கேள்வி எழுப்பினர்.
சிவானந்த காலனி டாடாபாத் சாலையில், மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொஅ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில், எம்பி கணபதி ராஜ்குமார் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கம், பிரதமர் மோடி , நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோரை கண்டித்து முழங்கினர்.
தொடர்ந்து மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex Mla பேட்டியின்போது கூறுகையில்;- மோடி 3 முறை பிரமராக பதவியேற்றும் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் கொண்டு வர வில்லை. அதேபோல், எந்த ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழகத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை. மோடியை தமிழகம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் புறக்கணித்து விட்டது. விரைவில் மோடி பிரதமர் நாற்காலியில் இருந்தும், ஒன்றிய பாஜக அரசும் தூக்கி வீசப்படும் என கூறினார்.
இதில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, துணைமேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட துணைச்செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், அசோக் ஆறுக்குட்டி, எம்என்கே.செந்தில், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், சிறுவாணி செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மெட்டல் கண்ணப்பன், ஏர்போட் ராஜேந்திரன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மகேந்திரன், துணைச்செயலாளர் தமிழ்மறை, தொழிலாளர் அணி மாநில துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட, ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..