CAA தொடர்பாக இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் தமிழக அரசு நாளை ஆலோசனை

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் நாளை தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது தலைநகர் டெல்லியில் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 2 போலீஸ்காரர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழகத்திலும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டையில் பல நாட்களாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் நாளை தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது.

சிறுபான்மையினரிடையே நிலவும் சந்தேகங்களை களைவதற்காக தலைமைச்செயலாளர் சண்முகம் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

What do you think?

‘2021ல் நான் தான் CM, வா மோதிக்கொள்வோம்’ வடிவேலு அதிரடி!

‘பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற உலகின் முதல் கிரிக்கெட் போட்டி’