“போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை” – அமைச்சர் உதயக்குமார்

பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஆ.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், பிலிப்பைன்ஸ், ஈரான் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் உள்ள மாணவர்களை மீட்பது தொடர்பாக முதலமைச்சர் வெளியுறவு துறையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு உரிய உணவு, பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மாணவர்கள் 170 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்குள்ள தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை போர்கால அடிப்படையில் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் உதயக்குமார் கூறியுள்ளார்.

What do you think?

‘ஆண் குழந்தைக்கு அப்பாவான இயக்குனர் பா.ரஞ்சித்’

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆக உயர்வு!