பட்ஜெட்டில் இடம்பெறாத தமிழ்நாடு..! கைவிட்ட நிர்மலா சீதாராமன்..!
இன்று 2024 – 2025ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்குதல் நடைபெற்றது.., அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில்.., “தமிழ்நாடு” என்ற வார்த்தை இடம்பெறவில்லை இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒவ்வொரு முறையும் திருக்குறள், புறநானூறு போன்ற வரிகளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கும் நிர்மலா சீதாராமன், இந்த முறை தமிழ் வார்த்தைகளே பயன்படுத்தாமல் நேரடியாக பட்ஜெட் உரையை பேச தொடங்கியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் நடப்பாண்டில் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டதால், கடந்த பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். அதன் பின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
அதன்பின் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடங்கியது. இந்நிலையில் மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.54 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சி ரூ.2.65 லட்சம் கோடியும், வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடியும், உள்துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கல்வித்துறைக்காக 1.25 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்காக 89,287 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளனர். அதேபோல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருந்த ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் வழக்கமாக திருக்குறள், புறநானாறு போன்ற சங்கக்கால பாடல்களை நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் வாசிக்கவில்லை .
கடந்த 2019 பட்ஜெட்டின் போது புறநானூறு பாடலை பாடிய நிர்மலா சீதாராமன், 2020 பட்ஜெட்டின் போது திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி பாடல்களை பாடினார். அதன்பின் 2021ஆம் ஆண்டு பட்ஜெட்டில் திருக்குறளையும் வாசித்து பட்ஜெட் உரையை தொடங்கியுள்ளனர்.
ஆனால் இந்த பட்ஜெட்டில் தமிழ் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு சார்பாக வெள்ள பாதிப்பிற்கான நிதியுதவி, மெட்ரோ திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் கூட இடம்பெறாதது தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..