நாடாளுமன்றத்தில் கடல் நீர்மட்டம் உயரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த ஒன்றிய அறிவியல் தொழில்நுட்பத்துறை இது வர இல்லாத அளவிக்ரும் கடலின் நீர்மட்டம் உயரந்துள்ளதாக தெய்வத்துள்ளது.
மாநிலங்களவியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடலின் நீர்மட்டம் குறித்து ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு, ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், 1901ம் ஆண்டு முதல் 1971 கடலுடைய நீர்மட்டம் சராசரியாக 1.3 மில்லிமீட்டர் மட்டுமே இருந்ததாகவும் கடந்த 2006 முதல் 2018 இடையிலான காலகட்டத்தில் மற்றும் கடலின் நீர்மட்டம் 3.7 மில்லிமீட்டர் உயரந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்தார்.
மேலும், இந்தியாவில் 6633 கிமீ தொலைவுக்கு கடலோர பகுதிகள் இருப்பதாகவும் இந்த அளவில் மூன்றில் ஒரு பகுதி கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழ்நாட்டை பொறுத்த வரை 991 கிமீ தொலைவிற்கு கடல் பகுதிகள் இருப்பதாகவும் அதில் 423 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார் அதாவது 42.7% வரை தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். கடலின் நீர்மட்டம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்தார்.