காவலர் தேர்விலும் முறைகேடு?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக காவலர் ஒருவர் தமிழக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டை தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு, காவலர் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவலர் ஒருவர் டி.ஜி.பியிடம் அளித்துள்ள புகாரில், ஒரே தேர்வு மையத்தில் சேர்ந்து தேர்வு எழுதுவதற்காக காவலர்கள் பலர் திட்டமிட்டு, ஒரே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். அமைச்சுப் பணியாளர்களின் உடந்தையில் அருகருகே உட்கார்ந்து தேர்வு எழுதுவது போல், காவலர்கள் இருக்கைகளை அமைத்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்வின்போது சில நேரங்கள் மட்டுமே சிசிடிவி காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, மீதி நேரங்களில் காவலர்கள் குழுவாக தேர்வு எழுதியதாகவும், கூகுளை பயன்படுத்தி தேர்வு எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தென்காசியை சேர்ந்த ஐஏஎஸ் அகாடமி உட்பட இரண்டு பயிற்சி மையங்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். காவலரே தேர்வு முறைகேடு குறித்து டிஜிபியிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

11 எம்.எ.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு – கிராம நிர்வாக அலுவலரிடம் சிபிசிஐடி விசாரணை