தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ராஜபக்சே சந்தித்து பேசினார். இதில் இருநாட்டு வெளியுறவுத்துறை விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும், இலங்கை நெருங்கிய நட்பு நாடுகள். சர்வதேச விவகாரங்கள் குறித்தும், பொருளாதார திட்டங்கள், வர்த்தகம் முதலீடு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் போராடி வருவதாக தெரிவித்த மோடி, தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்யுமாறு ராஜபக்சேவை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

What do you think?

இந்தியாவை பழிதீர்த்த நியூசி, 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்!

“பார்த்து நடந்துக்கோங்க முருகதாஸ் தம்பி” – தர்பார் விவகாரத்தில் டி.ஆர் பகீர்