தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..!! எடுக்கப்பட்ட முக்கிய விவாதம்…!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நடப்பு நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர் ஏ.வ.வேலு, அமைச்சர் ரகுபதி, உட்பட அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..