15 கோடி மதிப்பீட்டில் புதிய ஹஜ் இல்லம் – முதலமைச்சர் அறிவிப்பு

110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியை மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் 15 கோடி மதிப்பீட்டில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். வக்ஃப் வாரியத்தில் உலாமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ 25,000 மானியமாக வழங்கப்படும் என்றும், அவர்களுக்கான ஓய்வூதியம் 1,500-லிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

அரசு இல்லங்களில் உள்ள பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் செலுத்தப்படும், போன்ற அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

What do you think?

விபத்தில் சிக்கிய அஜித்; வைரலாகும் வீடியோ – #GetWellSoonThala

ஆண்களும் கருத்தடை செய்துகொள்ள வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்