‘பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது’ தமிழக அரசின் அறிவிப்பு நிறுத்திவைப்பு!

நேற்று தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அறிவித்த விடுமுறை அறிவிப்பு தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தமிழகத்திலும் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கொரோனா அதிகம் பாதித்த மாநிலமான கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் நேற்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட இந்த பள்ளி விடுமுறை அறிவிப்பை தற்போது தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கொரோனா எதிரொலியால் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கான விடுமுறை மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான விடுமுறை அறிவிப்பு போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

What do you think?

வேளாண் கடன் உச்சவரம்பை உயர்த்துக! – வைகோ கோரிக்கை

‘விஜய்யின் Punch Dialogue- யை பேசும் விஜய்சேதுபதி’ ரசிகர்களுக்கு செம Treat!