தமிழகஅரசு இதை உடனே செய்ய வேண்டும்..! ஆம்ஸ்ட்ராங் ஒரு போராளி..! தொண்டர்களுக்கு மாயாவதி..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை வந்தடைந்தார்.. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயவதி, அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்பதற்காக அயராது பாடுபட்டவர் ஆம்ஸ்ட்ராங்.
அவரது படுகொலை செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். சட்டம் – ஒழுங்கு இந்த மாநிலத்தில் சரியில்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது. கட்சியின் மாநிலத் தலைவருக்கே இப்படி ஒரு நிலை என்றால் சாமானிய மக்களின் நிலைமை என்னவென்று தலித் மக்கள் மிகவும் அஞ்சுகிறார்கள்.
எங்கள் கட்சியே மிகவும் துயரமாக உள்ளது. சட்டத்தை எங்கள் கட்சியினர் கையில் எடுக்கமாட்டார்கள். ஆனால், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐடி அதிகாரிகளுக்கு மாற்ற வேண்டும்.
அதை செய்வதில் தமிழக காலம் தாழ்த்த வேண்டாம், தமிழக அரசு இந்த கொலை வழக்கை விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
அம்பேத்கர் மீது கொண்ட பற்றின் காரணமாக, எங்கள் கட்சியில் சேர்ந்து மக்களுக்காக ஒரு போராளியை போல ஆம்ஸ்ட்ராங் பாடுபட்டார். அவரது வழியில் நீங்களும் (கட்சித் தொண்டர்கள்) கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்” என்று மாயாவதி பேசினார்.
இந்த நிகழ்வின்போது, மாயாவதியுடன் விசிக தவைவர் திருமாவளவன், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..