‘கேப்டனாக பொறுப்பேற்கும் நட்சத்திர வீரர்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் தமீம் இக்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி 3-0 என்ற கணக்கில் வென்று ஜிம்பாப்வே WhiteWash செய்தது.

Mortazaக்கான பட முடிவுகள்
மொர்டாஷா

இந்த தொடருடன் வங்கதேச அணியின் ஒருநாள் கேப்டன் பதவியை தான் ராஜினாமா செய்வதாக அந்த அணியின் கேப்டன் மொர்டாஷா அறிவித்தார். அதன்படி நேற்று இந்த தொடர் முடிவடைந்த நிலையில் தனது கேப்டன் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

tamim iqbalக்கான பட முடிவுகள்
தமீம் இக்பால்

எனவே வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வங்காளதேசம் அணியின் ஒருநாள் கேப்டனாக நட்சத்திர வீரர் தமீம் இக்பாலை கேப்டனாக நியமித்துள்ளது. 30 வயதாகும் தமீம் இக்பால் இதுவரை வங்கதேச அணிக்காக 207 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7, 202 ரன்கள் குவித்துள்ளார். மேலும் தற்போது நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் தொடர் நாயகன் விருதை வென்றும் அசத்தியுள்ளார்.

What do you think?

60வது வயதில் திருமணம் செய்துகொண்ட காங்கிரசின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்!

‘வேகமாக பரவும் கொரோனா வைரஸ்’ சாம்சங் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!