அவமானமாக நடத்தப்பட்ட தாரிகா..! தேடி சென்று கொலை மிரட்டல்..! இவர் சமூக போராளியா..?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்., அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. அதே சமயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அது சம்மந்தப்பட்ட அந்த நபர்களுக்கு அச்சுருத்தல் இருப்பது உண்மையா என்ற பட்சத்தில் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றாலும் அந்த நபர் ஒன்றும் அத்தனை அப்பாவிகள் இல்லை என்பதும் உண்மை.
1. அவரின் ஆரம்பகாலத்தில் அவருடைய அன்ற வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருந்த என்னையே, அவரின் சில அற்ப செயல்களை சுட்டிக்காட்டியதற்காக, அவரின் கீழ் இருந்த திருநங்கையர் ஒருவர் 4 மணிநேரம் என்னை தாக்க முயற்சி செய்தவர். அன்றைய வீட்டு உரிமையாளர் தந்த அடைக்கலத்தால் அன்று தப்பித்தேன்.
“வீட்ட விட்டுப்போராங்க, நாங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாமல் பார்த்துக்கொள்கிறோம், இவரால் எங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுகள், காவல்துறையையும் அழைத்து எங்களுக்கு மேலும் அவமானம் தேடி தர வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டதால் சிறைக்கு செல்லாமல் தப்பித்தவர்.
2. அதே வீட்டில் எங்களுடன் வசித்த மற்றொரு தோழியை அதே தெருவில் அரிவாளை எடுத்துக்கொண்டு துரத்தியுள்ளார்.
3. அவருக்கு அல்லக்கையாக இருந்த ரெஜினா என்னும் திருநங்கையையும் இதே போன்று இவர் அரிவாளை தூக்கிக்கொண்டு துரத்தியதும், பின்னர் அந்த ரெஜினாவே இவருடன் இணைத்து என்னை தாக்கவந்ததும் என்னால் இப்போது வரை ஜீரணிக்க முடியவில்லை.
4. தாரிகா என்னும் திருநங்கையை, தனது மகள் என்றும், என்னால் தான் பள்ளிப்படிப்பை படிக்கிறாள் என்று சொல்லி சொல்லியே தாரிகாவை அவமானகரமாக நடத்தியதோடு அவர் அடிமையாகவும் நடத்தி வந்தார்.
பின்னாளில் அவரது கொடுமையை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறியவர்களை, தூத்துக்குடியில் அவரது வீட்டிற்கே சென்று, தாரிகாவையும், அவரது பெற்றோரையும், பல திருநங்கைகளை கூட்டி சென்று, அரிவாளோடு வெட்டுவேன், வெளியே வாடா என்று ஆபாசமாகவும், அருவெருப்பாகவும் பேசி தாரிகாவிற்கு உயிராபத்தை ஏற்படுத்தினார்.
5. சமூக போராளி என்னும் அடையாளத்துடன் நடமாடும் ஒரு அறியப்படாத, கொலை பாதகத்துக்கு அஞ்சாத ஒரு ரவுடிதான் இந்த நாதக தங்கை. இவை எனக்கு உறுதியாக தெரிந்த சம்பவங்கள் மட்டுமே. மேலும் பல உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் வந்து தைரியமாக பேசினால் மேலும் பல உண்மைகள் தெரியவரும்.
இன்று தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தன்னைத்தானே சமூகப்போராளி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவரிடமிருந்து பல இளம் திருநங்கைகளை காப்பற்ற வேண்டியுள்ளது. இவரது இந்த அடாவடிகளை அறியாதவர் இல்லை ரஞ்ஜித். ஆனால், ரவுடிகளிடம் தலித் தலைமைப்பண்பை தேடும் அரியகுணமடையரோ என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..