டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

பிரதமரின் ஊரடங்கு உத்தரவு அழைப்பை அடுத்து நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மார்ச் 22ஆம் தேதி(நாளை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வீடுகளுக்குள் இருக்கவேண்டும். இது மக்கள் ஊரடங்கு உத்தரவு என்றும் மிக மிக அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் பிரதமரின் ஊரடங்கு உத்தரவு அழைப்பையடுத்து நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

What do you think?

’10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை’ 3வது மாடியிலிருந்து உடலை வீசிய கொடூரன்!

‘2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா?’ மூடப்படும் அரசு அலுவலகங்கள்!