டேஸ்ட்டி ஆன கொள்ளு முறுக்கு.., இனி நொடியில் செய்யலாம்…!!
ஒரு வாரத்திற்கு இனிமேல் ஸ்நாக்ஸ் பிரச்சனையே இல்ல..,
நம்முடைய பாட்டிக்கு தெரியாத ஒரு சூப்பரான முறுக்கு ரெசிப்பியைத் தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.
ஒரு வாரத்திற்கு இனிமேல் ஸ்நாக்ஸ் பிரச்சனை வராமல் இருக்க, கொள்ளு வைத்து மொருமொரு முறுக்கு செய்துவச்சிடுங்க.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த கொள்ளுப்பயறு முறுக்கை சுலபமாக செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 2 கப்
பச்சரிசி மாவு – 1 கப்
கொள்ளு பயிறு (வேகவைத்து விழுதாக அரைக்கவும்) – 4 கப்
கருப்பு எள் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
கடலைமாவு, பச்சரிசி மாவு, வேகவைத்து மசிக்கப்பட்ட கொள்ளு மற்றும் கருப்பு எள், பெருங்காத்தூள், உப்பும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மென்மையாக பிசைந்துகொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடுபடுத்தவும். பின்பு கலந்து வைத்திருக்கும் மாவில் முறுக்கு பிழிந்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மொருமொரு கொள்ளு முறுக்கு ரெடி.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..