டேஸ்டியான அரிசி தட்டை…!! இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!!
சூப்பரான ஸ்நாக்ஸ் அரிசி தட்டை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் மாலை நேரத்தில் டீ காப்பியுடன் சேர்த்து சுவையான ஸ்னாக்ஸ் சாப்பிட ஆசைப்பட்டால் இந்த அரிசி தட்டையை முயற்சிக்க செய்யலாம்
அரிசி மாவு -2 கப்
பச்சை மிளகாய் -3
பெருங்காயத்தூள் -சிறிதளவு
எல் -ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் -கால் கப்
வெண்ணை -சிறிதளவு
உப்பு சுவைக்கேற்ப
எண்ணெய் தேவையான அளவு.
அரிசி தட்டை செய்திட முதலில் பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இப்போது கடாய் சூடாக்கி வெறுமனே அரிசி மாவை கூட்டி லேசாக வறுத்து எடுத்து பவுலுக்கு மாற்றவும்.
அத்துடன் பச்சை மிளகாய் விழுது பெருங்காயத்தூள், எள் மற்றும் தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும்.
அடுத்து வெண்ணை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
இறுதியாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இப்போது மாவை தட்டைகளாக தட்டிக் கொள்ளவும் அதனை துணியில் பரப்பி சிறிது நேரம் உலர வைக்க வேண்டும். அதனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான அரிசி தட்டை ரெடி.
இதனை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கக்கூடும். இந்த ரெசிபி செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று இந்த பதிவில் பார்கலாம் வாங்க