கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக விழுப்புரம் புறப்பட்டார் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின். வழியில் அவர் மேற்கொள்ள உள்ள ஒட்டுமொத்த நிகழ்ச்சிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்…
1.முண்டியாம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கிறார்.
2.கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.
3. மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கு அல்லது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
4. கள்ளச்சார விவகாரம் தொடர்பாக அதிகவழக்குகள் உள்ள காவல் நிலையங்களுக்கு நேரில் ஆய்வு செய்கிறார் (குறிப்பாக விழுப்புரம் மாவட்ட காவல் நிலையம், செஞ்சி மாவட்ட காவல் நிலையம், சங்கராபுரம் அல்லது அரகண்டநல்லூர் உள்ளிட்ட ஏதேனும் ஒரு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்)
நேரத்தின் அருமையை கருதி காவல் நிலையங்களுக்கு செல்ல முடியவில்லை என்றால் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிவி.கணேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செல்கின்றனர்
பணிகள் அனைத்தும் ஆய்வு மேற்கொண்ட பிறகு இன்று மாலை மீண்டும் சாலை மார்க்கமாக சென்னை திரும்புகிறார் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின்.