மாணவர்களிடம் ஆசிரியர்கள் நேர்மையை விதைக்க வேண்டும் – சகாயம் ஐ.ஏ.எஸ்

மாணவர்களிடம் ஆசிரியர்கள் நேர்மையை விதைக்க வேண்டும் என சகாயம் ஐ.ஏ.எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாவட்ட அளவில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக. தமிழக அரசின் அறிவியல் நகர் தலைவர் சகாயம் ஜ.ஏ.எஸ் கலந்து கொண்டு மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

பின்னர் பேசிய அவர், மாணவர்கள் எழுச்சி பெறும் வகையில் அவர்களுக்கு சமுதாய உணர்வை ஊட்ட வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களையே சாரும் என்றார் . தமிழகத்தில் தமிழை வளர்ப்பது அரசு பள்ளிகள் மட்டுமே என்றும் அவர் கூறினார்.

What do you think?

இராஜா முத்தையா பெயரை நீக்க வைகோ எதிர்ப்பு…!

இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி அபார வெற்றி!