“மாணவர்களுக்கு திசைகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள்..” முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!!
இந்தியா முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது., மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆண்டு தோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது..
ஒரு மாணவன் ஒழுக்கமான மாணவனாகவும்., படிப்பிலும் திறமையிலும் முன்னேறி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து செல்கிறான் என்றால் அதற்கு காரணம் அவர்களின் பெற்றோர் மட்டுமின்றி ஆசிரியர்களும். அப்படி ஒருவரை வழிநடத்தி செல்லும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்..
“பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்..! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்..!
அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்..! என இவ்வாறே பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..