‘மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கானா ஆணவக்கொலை’ அம்ருதாவின் தந்தை தற்கொலை!

தெலுங்கானாவில் தனது மகளின் கணவரை கூலிப்படையை வைத்து ஆணவக்கொலை செய்த தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கானாவில் நடந்த ஆணவக்கொலை நாட்டையே உலுக்கியது. பிரணய் குமார் என்பவர் தனது கர்ப்பமான மனைவி அம்ருதாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் போது கூலிப்படையை சேர்ந்த சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இந்த கொலையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த கொலையை அம்ருதாவின் தந்தையும் தொழில் அதிபருமான மாருதி ராவ் தான் செய்ய சொன்னார் என்பது தெரியவந்தது. தனது மகள் வேறொரு சாதி பையனை திருமணம் செய்துகொண்டதால் மாருதி ராவ் தனது மகளின் கணவரை ஆணவக்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட மாருதி ராவ் சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் மாருதி ராவ் தன்னுடைய பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

பாரத் பெட்ரோலியத் துறை விற்பனைக்கு – மத்திய அரசு

நடு ரோட்டில் தீப்பிடித்த கார் – குடும்பத்தினர் உயிர் தப்பிய அதிசயம்