வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு…!!
தமிழ் திரைவுலகின் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் படதில் நடித்து வருகிறார்.. இதற்கிடையில் வருகின்ற அக்டோபர் 10ம் ஞானவேல் இயக்கத்தில் லைக்க ப்ரொடக்ஸன் தயாரிப்பில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படமானது வருகின்ற அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது..
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ம் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயிறு சம்மந்தமான பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்..
அதன் பின்னர் அவரது மக்கள் சௌந்தர்யா நேற்று சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவிலுக்கு சென்று தனது தந்தை குணமாக வேண்டுமென சிறப்பு பூஜைகள் செய்துள்ளார்…
தற்போது நடிகர் ரஜினிகாந்த் மூன்று நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின் இன்று வீடு திரும்பினார்.. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு அதன் பின் மீண்டும் படம் நடிக்க செல்லப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்..