“வந்துட்டேனு சொல்லு அசத்தல் ஆப்பரோட வந்துட்டேனு சொல்லு..”
தற்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன்., நிறுவனங்கள் ரீசார்ஜ் விலையை அதிகரித்துள்ள நிலையில் அதிரடியாக பிஎஸ்என்எல் ( BSNL ) நிறுவனம் களம் இறங்கியுள்ளது என சொல்லாம்.
கடந்த ஆண்டு ஜியோ, ஏர்டெல், வோடபோன்., நிறுவனங்கள் கட்டண விலையை உயர்த்தியுள்ள நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் விலையை அதிகரித்துள்ளது.. இதனால் ஜியோ, ஏர்டெல், வோடபோன்., பயன்படுத்தி கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி புதிய வாடிக்கையாளர்கள் என 30 லட்சம் பேர் தற்போது BSNL-க்கு மாறியிருப்பதாக ஒரு சென்செஸ் புள்ளி விவரம் கூறுகிறது.
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள் :
பிஎஸ்என்எல் 228 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு மாதத்திற்கு தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். அது தவிர, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS, Arena மொபைல் கேமிங் சர்வீஸ், BSNL ட்யூன்ஸ், ஆஸ்ட்ரோடெல், பிஎஸ்என்எல் டியூன்ஸ் , ஹார்டி மொபைல் சர்வீஸ் உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கியுள்ளது.
அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டாவை பயன்படுத்தும் விதமாக இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbps ஆக குறைகிறது.
பிஎஸ்என்எல் 247 ரூபாய் ரீசார்ஜ் திட்டமானது 30 நாட்களுக்கு மொத்தம் 50ஜிபி டேட்டா என்ற சேவையை வழங்குகிறது. அது தவிர அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS மற்றும் டாக் வேல்யூ 10 ரூபாய் உள்ளிட்ட பல சிறப்பு திட்டங்களை வழங்குகிறது.
தற்போது 2ஜி சேவையில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை தொடங்கவுள்ளதாக அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 1 மாதத்தில் மட்டும் 20 லட்சம் வாடிக்கையாளர்கள் BSNL சேவைக்கு மாறியுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..