“ஈரான் கட்டமைப்பின் பயங்கரவாதம் சரிவு..” இஸ்ரேல் பிரதமர் கருத்து…!!
“ஈரான் கட்டமைப்பின் பயங்கரவாதம் சரிவதாகவும், ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை முன்வைத்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்..
பல மாதங்களாகவே இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்டு கொண்டே வரும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் லட்சம் கணக்கானோர் உயிர் இழந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது..
இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை தாக்குதலை நடத்தினர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானுக்கு ஆதரவு தரும் விதமாக இஸ்ரேல் இராணுவத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர். அதில் பல்லாயிரம் கணக்கானோர் உயிர் இழந்தனர்.. அந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொடுரமாக படுகொலை செய்யப்பட்டார்.
தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்., தற்போது அவை பேசும் பொருள் ஆகியுள்ளது.. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது.,
“ஈரான் கட்டமைத்த தீவிரவாதிகளின் அச்சுகள் சரிந்து கொண்டே வருகிறது. முன்னதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இஸ்மாயில் ஹனியாவும் கொலை செய்யப்பட்டார். அதற்கு ஈடுகட்டும் விதமாக ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃபை கொலை செய்யப்பட்டார். ஈரான் தனது சொந்த மக்கள் மீதும், அண்டை நாடுகளான ஈராக், சிரியா, லெபனான், ஏமன் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடித்து
இந்த தாக்குதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.. இந்த யுத்தம் இல்லா எதிர்காலத்தை உருவாக்க எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
யஹ்யா சின்வர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்தப் போரில் மிக முக்கிய இலக்கை இஸ்ரேல் எட்டியுள்ளது. பாலஸ்தீனம் நடத்திய யூத இனப் படுகொலைக்குப் பின் இஸ்ரேல் மீது அதரடி தாக்குதல் நடத்திய அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக எதிர் தாக்குதலை நடத்தி கணக்கைத் தீர்த்துள்ளோம்.
இருந்தும் கூட ஹமாஸ் மற்றும் ஈரான் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்து வரும் இந்த தாக்குதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இருந்தும் கூட இந்த தாக்குதலின் இறுதியில் நாங்கள் வெல்வோம்” என பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறே அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..