பொங்கலுக்கு வெளியாக இருக்கும் துணிவு படத்தின் அப்டேட்க்கு ரசிகர்கள் தவம் இருந்து காத்துக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து துணிவு படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொங்கலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் துணிவு படத்தை குறித்த எந்த ஒரு அப்டேட்டயும் அப்படக்குழு வெளியிடாமல் இருந்தது. ஒரு புறம் வாரிசு படத்தின் முதல் பாடல் இரண்டாவது பாடல் என்று அடுக்கடுக்காக அப்டேட்களை விட துணிவு படம் எந்த அப்டேட்களையும் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது. இதனால் ரசிகர்கள் ஒரு புறம் அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வந்தனர்.
https://twitter.com/BoneyKapoor/status/1599742910337273857
இந்நிலையில், துணிவு படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா பாடல் குறித்த தகவலை துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார். மிகவும் எதிர்பார்க்கபட்ட இப்பாடலின் அப்டேட் ஒரு வழியாக கிடைத்துவிட்டது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சில்லா சில்லா பாடல் டிசம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணிவு மற்றும் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே அதிகரித்துள்ளது. சில்லா சில்லா பாடல் வாரிசு படத்தின் தீ தளபதி பாடலை ஓரம் கட்டும் அளவிற்கு இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. சில்லா சில்லா பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.