கொரோனா வைரஸ் பீதியால் சொகுசு கப்பல் நுழைவதற்கு தாய்லாந்தும் தடை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் திருப்பியனுப்பப்பட்ட ஹாலந்து அமெரிக்க கப்பல் நுழைவதற்கு தாய்லாந்தும் அனுமதி மறுத்துவிட்டது.

சீனவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஹாங்காங்கிலிருந்து இம்மாதம் 1ஆம் தேதி புறப்பட்ட எம்.எஸ்.வெஸ்டர்டாம் என்ற பயணிகள் சொகுசுக் கப்பல் நுழைவதற்கு ஜப்பான், தைவான், குவாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தடை விதித்திருந்தன. கப்பலில் இருக்கும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹாலந்து அமெரிக்க கப்பல் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. அதில், கப்பல் பயணிகள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளது. இருப்பினும், கப்பல் நுழைவதற்கு தங்கள் நாட்டில் அனுமதி இல்லை என தாய்லாந்து அறிவித்துள்ளது. இதனால் கப்பலில் உள்ள பயணிகள், ஊழியர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

What do you think?

அமித்ஷா மிகுந்த வேதனையில் இருப்பார்: சிவசேனா கிண்டல்!

சென்னை-மைசூருக்கு மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில்!!!