“அண்ணாத்த” வந்துட்டாரு – ரஜினி 168!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் . இந்தப் படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், படத்தின் பெயர் என்ன என்பது குறித்த மாஸ் அப்டேட்டை, திரைப்படத்தைத் தயாரிக்கும் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஜினி – சிவா காம்போவின் படத்திற்கு அண்ணாத்த எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பெயர் வெளியிட்டுக்கு வெறும் போஸ்டரை ரிலீஸ் செய்யாமல், சுமார் 1 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. வீடியோவின் பின்னணியின் இசையமைப்பாளர் டி.இமானின் பிஜிஎம் தலைப்பின் மாஸை மேலும் கூட்டும் வகையில் அமைந்துள்ளது.

What do you think?

தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் தீவிரமாக செயல்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்…!

லைகா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம்…!