தளபதி 65 திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான இந்த படத்தின் 2ம் பாகமா?

தளபதி 65 படத்திற்காக விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 64வது படமான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் அடுத்ததாக தன்னுடைய 65 படமான தளபதி 65 படத்தில் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

தளபதி 65 படத்திற்காக விஜய்யிடம் கார்த்திக் சுப்புராஜ், பிரதீப் ரங்கநாதன், பாண்டிராஜ் மற்றும் சுதா கொங்கரா என பலரிடமும் கதை கேட்டுள்ளார். அதில் சுதா கொங்கரா கூறிய கதை பிடித்திருந்தது ஆனால் திரைக்கதை அமைக்கும் பணிக்கு அதிக காலம் எடுக்கும் என்று அவர் கூறியதால் வேறு இயக்குனரை விஜய் தரப்பில் தேடியுள்ளனர்.

இந்நிலையில் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் என மூன்று படங்களை இயக்கிய முருகதாஸ் தான் தற்போது இந்த படத்தை இயக்கபோகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படம் விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விஜய் முதன் முதலாக ஒரு படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

மத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்!

திருமணமான ஒரே நாளில் காதல் ஜோடி தற்கொலை!