தளபதி 69 அப்டேட்..! தளபதி 68 ரிலீஸ் டேட்..! தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் தான் “Greatest Of All Time” (GOAT).. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இதற்கு முன் வெளியான தளபதியின் லியோ படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றது என சொல்லலாம்.., படத்தின் பாடல் முதல் சீன்கள் என அதை நீக்க வேண்டும், தளபதி சிகரெட் பிடிப்பது நீக்க பட வேண்டிய காட்சி என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தும் விஜய் ரசிகர்களால் படம் நல்ல வசூலை பெற்றது என சொல்லலாம்.
அதன் பின் தற்போது வெளியாக உள்ள GOAT திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் நல்ல ஹிட் கொடுத்துவிட்டது என சொல்லலாம்.., எனவே படமும் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு பலரின் மனதிலும் தோன்றிவிட்டது.
இப்படியாக படம் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே விஜயின் கடைசி படமாக உள்ள தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது. வினோத்தின் இந்தப் படம் அரசியல் களந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சமந்தா ஹீரோயினாக நடிக்கவுள்ளார், இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தளபதி 69 படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
“ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவுக்கு முக்கிய முதல் காரணமே இது தான்”.. பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி..!
– லோகேஸ்வரி.வெ