தளபதி விஜய்க்கு வந்த புதிய சிக்கல்..!! தவெக மாவட்ட தலைவர்களின் புதிய டீலிங்..!!
தற்போது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.., தேசிய கட்சி முதல் சுயேட்சை கட்சி வரை தற்போது தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சில மாவட்ட நிர்வாகிகள் பிரதான எதிர்க்கட்சிகளிடம் பேரம் பேசி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் சினிமாவில் அவர் பல அவமானங்களை ஆரம்பத்தில் சந்தித்தார்.., குறிப்பாக பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்று அவரை விமர்சனம் செய்து எழுதியிருந்தது.., அதன் பின் அதே நிறுவனம் வாரிசு படத்தில் தளபதி விஜய் பற்றி புகழ்ந்து எழுதியது.
பிரபல பத்திரிக்கையில் எழுதப்பட்டது :
“இரட்டை அர்த்த வசனங்கள் பேச தெரியவில்லை, ஆபாச நடனம் வரவில்லை.., தகர டப்பா போல இருக்கும் இவரை யாரு படம் நடிக்க வர சொன்னது” அதன் பின் 2022ம் ஆண்டு “நடிப்பால் உயர்ந்த நாயகன்.., பல விமர்சனங்களை எதிர்கொண்ட சானக்கியன், ரசிகர்களை நேசிக்கும் ஒரே தலைவன் என புகழ்ந்து எழுதியுள்ளனர்.
காதல், ஆக்சன், காமெடி, நடனம் , பாடல் என தளபதி விஜய் எப்படி நடித்தாலும் அவரின் படம் ஹிட் என கொண்டாட வைக்கும் அளவிற்கு இருக்கும் அதற்கு காரணம் நடிப்பும் ரசிகர்கள் கூட்டம் என சொல்லலாம்.
தளபதி படம் அறிவிப்பு வெளிவந்தாலே கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும் என்பது தான். திரையுலகிலும் சரி பொது வாழ்விலும் சரி விஜய் எப்போதுமே மிக ஆழமாகவும் கவனமாகவும் சிந்தித்து செயல்படுவார்.
இவரை புடிக்காத சில பேர் இவரின் படம் வெளியாகும் போதெல்லாம் பல சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகளை கொடுத்தாலும் அதை தாண்டிய வெற்றி தளபதி படத்திற்கு கிடைக்கும்.
ஆரம்ப காலத்தில் இருந்தே தளபதி விஜய்க்கு உதவும் குணம் உண்டு.., சுனாமி வந்த போதும் அவரது பணத்தை கொடுத்து உதவி மற்றவரையும் கொடுக்க வைக்க வீதி வீதியாக சென்று பணம் திரட்டினார். அதன் பின் ரசிகர் மன்றங்கள் தொடங்கி உதவிகள் செய்ய ஆரம்பித்தார்..,
சமூக அக்கறை உள்ள விஷயங்களிலும் ஈடுபட ஆரம்பித்தார். மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்த போதெல்லாம் தளபதி விஜய் முதல் ஆளாக நின்று மக்களுக்காக பாடுபட ஆரம்பித்தார்.
பின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கெடுத்தார். அதிலிருந்து இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு அதிகரிக்க தொடங்கியது. இதை அடுத்து தனது ரசிகர் மன்றங்களை விஜய், “விஜய் மக்கள் இயக்கம்” என மாற்றினார்.
ஆரம்ப காலத்தில் இருந்தே தளபதி விஜய்க்கு ரசிகர்கள் கூட்டமும் பலமும் இருக்கிறதோ அதில் 2பங்கு அளவிற்கு அவரை பிடிக்காத கூட்டமும் இருக்கிறது.., அவர் செய்து உதவிகளை எல்லாம் வெறும் அரசியலுக்காக செய்கிறார் என பல விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது.
அதன் பின் சர்க்கார் படம் முதல் லியோ வரை அவர் படம் என்றால் எதிர்ப்புகளை தாண்டி வெளியாகும் என்ற சூழல் உருவானது. ஒருசில மேடைகளில் தளபதி விஜயும் சொல்லியிருப்பார்.., “என்னை நோகடித்தாலும் பரவாயில்லை என் ரசிகர்களை எதுவும் செய்ய வேண்டாம் என கேட்டு இருப்பார்” ரசிகர்களை நேசித்த ஒரு தலைவர் அதே ரசிகர்களின் ஆசைக்காக அரசியலில் வர போவதாக அறிவித்தார்.
அரசியலுக்கு ஏனோ தானோ என்று எல்லாம் வரக்கூடாது ஒரு முறை வந்தால் அதில் முழுநேரமும் ஈடுபட வேண்டுமென தீர்க்கமாக இருந்தார். மாநில நிர்வாகிகள் நியமனம் மாவட்ட தலைவர்கள் நியமனம் அடிக்கடி ஆலோசனை மாணவர்களுக்கு திட்ட உதவிகள் வழங்குவது என தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்ய தொடங்கினார்.
அதன் பின் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் நடிகர் விஜய், கட்சியை தொடங்கினார்.. நெருங்கி வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என தளபதி விஜய் அறிவித்த நிலையில்.., அவரது கட்சி நிர்வாகிகள் சிலர் அப்பகுதியைச் சேர்ந்த சில கட்சி நிர்வாகிகளுடன் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வருகின்றனர்.
அது தொடர்பாக தவெகவை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய போது, தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் உள்ள ஒரு சில பகுதிகளில் மாவட்ட நிர்வாகிகளும் ஒன்றிய பகுதி நிர்வாகிகளும் பிரபல அரசியல் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு ஆதரவளிக்கிறோம் என கூறி பணம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தொகுதிக்கு ஏற்றார் போல செயல்பட மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் ஆதரவு திரட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.., அதில் ஒரு சில கட்சி நிர்வாகிகள் தவெகவின் நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்திருப்பாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களுக்கு கீழ் பணியாற்றும் நிர்வாகிகளையும் அவ்வாறே செயல்பட வேண்டும் என வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.
விஜய் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே இது போன்ற செயலில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தன் மீது எந்த கட்சியின் அரசியல் சாயமும் பூசப்பட்டு விடக்கூடாது என தெளிவாக இருக்கும் நடிகர் விஜய் தனது சினிமா தொடர்பான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நிர்வாகிகள் சிலரது செயல்பாடுகள் கட்சி தலைமைக்கு எதிராக நிர்வாகிகள் செயல்படுவதாக எழப்படும் புகார்களுக்கு.., எந்தெந்த நிர்வாகிகள் எந்தெந்த கட்சிகளுடன் மறைமுக தொடர்பில் இருக்கிறார்களோ அவர்களை பதவி நீக்கம் செய்துவிடுவோம் என தெரிவித்துள்ளனர். மேலும் ஒருமுறை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டால் மீண்டும் அவர்களை சேர்க்க மாட்டோம் என தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..