ஸ்டார் படத்தின் வசூலை கூட பெறாத அந்த திரைப்படம்..? சந்தானத்தின் சம்பளம்..?
விஜய் டிவியின் லொல்லு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் 2004ல் சிம்பு நடிப்பில் உருவான மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தார்.பின்னர் பல முன்னனி நடிகர்களின் வெற்றி படத்தில் நடித்த இவர் இனி நகைச்சுவை நடிகராக நடிக்க மாட்டேன் என கூறினார்.
அதன் பிறகு அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் நடித்தார்.இந்த படம் நல்ல வரவேற்ப்பு பெற்ற நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என பல ஹிட் படங்களை கொடுத்தார்.
அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்கும் சந்தானம் :
சந்தானம் தொடர்ந்து அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். என்னதான் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் ஒரு சில படமே அவருக்கு வெற்றியை தருகிறது. பல படங்கள் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. அதன்படி சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓரளவு சுமாராக இருந்தாலும் வசூல் ரீதியாக போட்ட பணத்தை திருப்பி பெற்று விட்டதாக கூறப்பட்டுகிறது.
இந்நிலையில், சந்தானம் நடிப்பில் நேற்று வெளியான இங்கு நான் தான் கிங்கு’ திரைப்படம் முதல் நாளிலேயே வசூலில் சறுக்கி இருக்கிறது. கடந்த அண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெற்றிக்கு பிறகு சந்தானம் நடிக்கும் படங்கள் எல்லாம் ப்ளாப் ஆகி தான் வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இங்கு நான் கிங்கு இணையுமா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
கவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் மூன்று கோடி ரூபாயும் முதல் வாரம் 15 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியுள்ளது. இந்நிலையில், ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இங்க நான் தான் கிங்கு திரைப்படம் முதல் நாளில் ஒட்டுமொத்தமாக வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே வசலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சந்தானத்தின் சம்பளமே 10 கோடி ரூபாய் :
இந்த படத்தில் சந்தானம் 10 கோடியை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தின் மொத்த வசூலே 5 கோடியை தாண்டுமா? என்பது சந்தேகமானது எனக் கூறுகின்றனர்.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..