நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு அதுமட்டும் தான்..!! மனம் திறந்த ஸ்வர்ணமால்யா..!!
சினிமாவில் மட்டுமல்ல இப்போ எல்லாம் பொண்ணுங்க வேலை தேடி போற ஒரு சில எடத்துல கூட அட்ஜெஸ்ட்மெண்ட் தான் கேட்குறாங்க.. வேலையில முன் அனுபவம் இருக்கா என்கிற காலம் போய் வேலை அனுபவம் இல்லைனாலும் அவங்க கேட்குறதுக்கு ஓகே சொல்லணும் என்கிற மாதிரி நினைக்குறாங்க..
ஆனா இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் என்கிற வார்த்தை அதிகமா சினிமாவில தான் இருக்குமாம் அதிலும் இந்த வேலையை அதிகமாக செய்வது துணை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர் தான் கேட்பதாக சொல்லபடுகிறது.. அப்படி ஒரு பெண்கள் வேறு வழியின்றி ஓகே சொல்கிறார்கள்.. மலையாள சினிமா முதல் தமிழ் சினிமா வரை பலரும் கடந்து வந்த விஷயமா..? இல்லை அதற்கு ஓகே சொன்னார்களா..?
ஒரு சில பெண்கள் அதுபோன்ற காட்சிகளிலும் நடிப்பது உண்டு.. இதை பற்றி பல கேள்விகள் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் இருக்கலாம். அதை பற்றி தெரிந்துகொள்ள நடிகை “ஸ்வர்ணமால்யா-வை” நம் மதிமுகம் தொடர்பு கொண்டு பேசினோம்.. அப்போது அவர் பேசியதாவது..
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை., இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் என்னுடைய முதல் படத்தை (அலைபாயுதே) வெற்றிகரமாக நடித்து முடித்தேன்.. இயக்குனர் மணிரத்தினம் அவரை போலவே எல்லோரும் இருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் சினிமாவில் இன்னொரு பக்கமும் இருக்கிறது என எனக்கு அதற்கு அப்புறம் தான் தெரிந்தது..
அலைபாயுதே படத்தை தொடர்ந்து எனக்கு மற்றொரு தெலுங்கு டப்பிங் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.. சரி 2௦ நிமிடம் கெஸ்ட் ரோல் தானே என நானும் என்ன ரோல் என கேட்காமல் ஓகே சொல்லிவிட்டேன்.. ஆனால் அந்த படம் ஆபாச படம் அதில் நடிக்க கூடாது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.
அதில் நான் நடிக்க வேண்டிய காட்சியை எனக்கு சிடியாக கொடுத்தார்கள் நம்முடைய காட்சிகள் குறைவாக தானே இருக்கிறது சொன்னதை செய்யப் போகிறோம் என்று நினைத்து நானும் அந்த சீடியை பார்க்காமல் அப்படியே விட்டுட்டேன்.. படத்திற்கான போட்டோ சூட் நடத்திய அப்போ தான் எனக்கு அது ஆபாச படம் என தெரிந்தது.
ஆனாலும் இதில் நடிக்க வேண்டுமா..? வேண்டாமா..? என்ற குழப்பத்தில் இருந்தபோது போட்டோ சூட் முடிந்து விட்டது. அதற்கு பிறகு கூட நான் காண்ட்ராக்ட் கேன்சல் செய்திருக்கலாம். ஆனால் அது எனக்கு அந்த நேரத்தில் பெரிதாக தெரியவில்லை.
அதற்கு பிறகு நான் ஆபாச படத்தில் நடித்து விட்டேன் என்று சில விமர்சனங்கள் வந்தது. இது நான் தெரியாமல் செய்த தவறு தான் இதைவிட பெரிய தவறு என்னுடைய வாழ்க்கையில் நான் திருமணம் செய்தது தான்.
திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்து விட்டோம். அதன் பின் அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் செட்டில் ஆகிவிட்டோம்
அப்போ எனக்கு எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாகவும், விஜயகாந்த் அவர்களின் தங்கையாகவும் நடித்திருந்தேன் அந்த படம் முழுக்க நான் அழுது கொண்டிருக்கும் கேரக்டர் எனக்கு கொடுத்தாங்க எனக்கு அழுகை காட்சி என்றால் பிடிக்காது.., இயகுனரிடன் இந்த காட்சி வேண்டாம் என சொல்லி சொல்லி எனக்கு கொஞ்சமாவது சிரிக்கிற காட்சி கொடுத்தார்கள்.. அந்த படத்தில் கூட ஒருத்தர் என்னிடம் கேட்டார் அவர் பேரை நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் எல்லோருக்கும் தெரியும் பொண்ணுங்க கிட்ட அப்படி நடந்துக்க கூடிய ஆள் யாருன்னு..
அவரு வந்து ஏன் கிட்ட கேட்டது., சூட் முடிஞ்சதும் நம்ப கொஞ்சம் வெளிய போலாமா பக்கத்துல தான் என் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு நீங்க ஓகே சொன்னா எனக்கு நிறைய இயக்குனர் தெரியும் நான் உனக்கு சேன்ஸ் தர சொல்லுறன்.. நானே கூட உன்னை வச்சி படம் பண்ணுவன் அப்படி கேட்டாரு எனக்கு ஒரே ஷாக். என்னடா இப்படியெல்லாம் கேட்குறாங்க சொல்லி நான் அழுதுட்டன் அப்புறம் விஜயகாந்த் சார் தான் அப்போ என்னை காப்பதுனாரு..
அப்போ தான் விஜயகாந்த் சார் எனக்கு ஒரு விஷயம் சொல்லி கொடுத்தார்., இதுமாதிரி கேட்க கூடிய நிறைய பேர் இருப்பாங்க அவங்களை எல்லாம் திருத்தவே முடியாது தன் தாயும் தங்கையும் போல தான் மற்ற பெண்களும் என நினைக்காதவர்களிடம் எதுவும் சொல்லி புரியவெக்க முடியாது ஆனா பொண்ணுங்க நீங்க பதிலடி கொடுத்துட்டு போகணும் சொன்னாரு.
இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் என்கிற வாரத்தையை நான் எல்லாம் இடத்திலும் கேட்டுவிட்டேன் அதனால் தான் எனக்கு சினிமா மீது இருந்த ஆசையே போயிவிட்டது எனக்கு சினிமாவில் சரியான வழிகாட்டுதல்கள் கிடையாது. என்னுடைய குடும்பத்தில் என்னுடைய தாத்தா சினிமாவில் தான் இருந்தார். ஆனால் எனக்கு பெரிதாக எதுவும் சொல்லித் தரவில்லை. அதனால் தான் நான் சில தவறான முடிவுகள் எடுத்தேன் என நடிகை ஸ்வர்ணமால்யா நம்மோடு அவருடை வாழ்க்கை அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்..
சினிமா வாழ்க்கையை அவர் பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்டு தற்போது ஒரு நாட்டியாலைய நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..