சுவையான ‘கோழியாப்பம்’ செய்யலாமா..!
மைதா மாவு – 1/2 கிலோ
தேங்காய் – 1
முட்டை – 1
நெய் – 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
முதலில் தேங்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 டம்ளர் தேங்காய் பால் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மைதாமாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு செய்துக் கொள்ளுங்கள்.
அத்துடன் முட்டை நெய் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
ஒரு கரண்டி மாவை தவாவில் ஊற்றி ஆப்பம் போல் சுழற்றி மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான கோழியாப்பம் தயார். இத்துடன் சிக்கன் கறி செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.
