டேஸ்டான பன்னீர் 65 எப்படி செய்வது..?
பன்னீரில் புரதம், கால்சியம், வைட்டமின் டி ஆகிய ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பன்னீர் உடலுக்கு நல்லது ஆனால் இதனை மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள் காரணம் இது உடல் எடையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுமாதிரி நான் சொல்லும் முறையில் பன்னீரை வாங்கி 65 செய்து கொடுங்கள், செய்ததே தெரியாது சீக்கிரமே காலியாகிவிடும்.
தேவையான பொருட்கள்:
- நான்கு டேபிள் ஸ்பூன் சோள மாவு
- இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
- அரை டீஸ்பூன் கரம் மசாலா
- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- கருவேப்பிலை
- உப்பு
- இரண்டு பச்சை மிளகாய்
- அரை டீஸ்பூன் மிளகுத்தூள்
- எலுமிச்சை பழச்சாறு
- 200 கிராம் பன்னீர்
- எண்ணெய்
- மூன்று பச்சை மிளகாய்
- கலந்து வைத்த பன்னீர்
- கறிவேப்பிலை
செய்முறை:
- பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் சோள மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சிறிது தண்ணீர் விட்டு கலந்துக் கொள்ள வேண்டும்.
- பின் நறுக்கி வைத்துள்ள பன்னீரை இந்த கலவையில் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள பன்னீரை எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- பின் அதே எண்ணெயில் பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரித்து அதையும் பொரித்த பன்னீரின் மேல் போட்டு பரிமாறலாம்.
- அவ்வளவுதான் சுட சுட பன்னீர் 65 தயார். இதை சூடாக சாப்பிடலாம் ரொம்ப டேஸ்டாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு இதை செய்து கொடுங்க உடம்புக்கு பன்னீர் ரொம்ப நல்லது கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.