தவெக தலைவர் விஜய் அரசியல் பேச்சு..! அரசியல் தலைவர்கள் சொன்ன கருத்து..!!
விக்கிரவாண்டி மானாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கு அரசியல் கட்சியினர் மத்தியில் இருந்து ரியாக்ஷன்கள் சற்று பார்ப்போம்….
ஆர்.பி.உதயக்குமார் :
தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுக-வுக்கு எள் முனையளவும் பாதிப்பு இல்லை – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து
சபானாயகர் அப்பாவு :
விஜய் கட்சியின் பின்னனியில் பாஜக இருக்கிறது. கமல், சரத்குமார், பாக்யராஜ் வரிசையில் கட்சி துவக்கி உள்ளார். வாழ்த்துக்கள் – சபானாயகர் அப்பாவு..
முதலமைச்சர் ஸ்டாலின் :
புதிய கட்சி தொடங்கி உள்ள விஜயை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். மற்றதை கட்சி பார்த்துக் கொள்ளும் – ரகசிய விவாதத்தில் கட்சியினருக்கு முதல்வர் உத்தரவு.
செல்வப்பெருந்தகை :
நேற்று பிறந்த புதிய குழந்தைதான் விஜயின் கட்சி எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். அதிகம் விமர்சனம் செய்யக் கூடாது – செல்வப்பெருந்தகை அறிவுரை
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி :
விஜய் A டீமும் இல்லை. B டீமும் இல்லை பாஜகவின் C டீம் . அதிமுகவின் தொண்டர்களை ஈர்க்கவே அக்கட்சியைக் குறித்து எதுவும் பேசவில்லை. திமுக குறித்து பேசி உள்ளார்.
எங்கள் கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது. தமிழக மக்களின் வெறுப்புக்கு கவர்னர் ஆளாகி இருப்பதால் கவர்னரை பற்றி பேசி உள்ளார்.- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
திருமாவளவன் :
ஒரு அடி மானாடு அடுத்த அடி கோட்டை என்ற வகையில் விஜயின் கற்பனை அதீதமாக உள்ளது – திருமாவளவன்.
சீமான் :
திராவிடமும் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னால் அது எங்கள் கொள்கைக்கு எதிரானது – சீமான்.
எடப்பாடி பழனிசாமி :
தமிழக வெற்றிக் கழகத்தால்., அதிமுகவின் வாக்குகளை ஒரு போதும் ஈர்க்க முடியாது.., – எடப்பாடி பழனிசாமி.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..