வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 56ம் ஆண்டு முருகன் கோவில் சித்திரை திருவிழா..!!
சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகரில் உள்ள திருமால் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடம் தோறும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று வரும் முதல் ஞாயிற்றுக் கிழமையில் திருவிழா நடைபெறும்.
இந்த வருடம் 56ம் ஆண்டு என்பது மிகவும் சிறப்பு மிக்கது. மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குழுவாக பிரிந்து முருகருக்கு அபிஷேகம் செய்து, பூக்களால் அலங்கரித்து, தீப ஆராதனை செய்து வழிபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு முருகனுக்கு பால்குடம் எடுப்பது, வேல் குற்றுவது, காவடி எடுப்பது, தேர் இழுப்பது என பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தியுள்ளனர்.
போன வருடத்தை இந்த வருடம் அதிக பக்தர்கள், நேர்த்தி கடன் செலுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பின் மாலை முருகர் வள்ளி, தெய்வானை யுடன், பக்தர்களுக்கு சிம்ம வாகனத்தில் காட்சி கொடுத்துள்ளார்.
பக்தர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாக சுற்றி எங்கும் போலீஸ் குவிக்கப் பட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதி மக்கள் தண்ணீர் பந்தல், வைத்து பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி அவர்களுக்கு வெப்பம் தெரியாத அளவிற்கு உதவி இருக்கின்றனர்.
மோர் பந்தல் வைத்தும் அனைவர்க்கும் மோர், குளிர்பானம், அன்னதானம் எனவும் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை தொடங்கிய திருவிழா மாலை நிறைவடைந்தது.
வெ.லோகேஸ்வரி