காதலை நம்பியதால் நடந்த விணை.. 21 வயது இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்..
தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும், அதே மாவட்டத்தை சேர்ந்த கவிதாசன் என்ற நபரும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 21 வயது இளம்பெண், சென்னையில் பணிபுரிந்து வருவதால், விடுமுறை நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், அப்பெண் ஊருக்கு வந்துள்ளார். இதனை அறிந்துக் கொண்ட காதலன் கவிதாசன், தனியாக பேச வேண்டும் என்றுக் கூறி, காதலியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இருவரும் சென்றபோது, கவிதாசனின் நண்பர்கள் பிரவீன், திவாகர் மற்றும் 17 வயது சிறுவன் என்று 3 பேர் வந்துள்ளனர். பின்னர், கவிதாசன் உட்பட 4 பேரும் சேர்ந்து, 21 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பித்து வந்த பெண், காவல்துறையில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான பிரவீன், திவாகர், கவிதாசன், சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
காதலனை நம்பி சென்ற பெண்ணுக்கு நடந்த இந்த கொடூரம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்