வேகவைத்த கைப்பிடி வேர்க்கடலை போதும்..! தவிர்க்காதீர்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
வேகவைத்த வேர்க்கடலை உடலுக்கு அதிகமான சக்தியை அளிக்கிறது. அவை என்னவென்று இப்போ பார்க்கலாம்.
- வேகவைத்த வேர்க்கடலையில் புரதம், மினரல், வைட்டமின், நார்ச்சத்து, கொழுப்பு ஆகியவை இருக்கிறது. இது உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் புரதம் கிடைக்க இந்த வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடலாம்.
- வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
- வேர்க்கடலையில் இருக்கும் ஆக்டி ஆக்ஸிடண்டுகள் உடலில் இருக்கும் ப்ரீரேடிக்கல்களை குறைத்து ஆரோக்கியத்தை தருகிறது.
- வேர்க்கடலையில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரதம் வயிற்றில் பசி உணர்வை குறைக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வேர்க்கடலையை உங்கள் உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
- வேர்க்கடலையில் இருக்கும் அதிகமான நார்ச்சத்து உடலில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயை தடுக்கலாம்.
- வேர்க்கடலை மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது அறிவினை மேம்படுத்தவும், ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கும் உதவுகிறது.
- வேர்க்கடலை உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றி இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதில் இருக்கும் கொழுப்பு கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
- இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிறு சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.