மீண்டும் த்ரிஷா-வுடன் ஜோடி சேரும் அந்த நடிகர்…!!
தமிழ் சினிமாவின் எத்தனை நடிகர் இருந்தாலும்., இன்னும் இளம் நடிகை மற்றும் பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர்களில் நடிகை த்ரிஷா-வும் ஒருவர்..
ஜோடி படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா.
தமிழில் மட்டுமா தெலுங்கிலும், மலையாளத்திலும் த்ரிஷா எப்பவும் பேமஸ் என சொல்லலாம்., தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை த்ரிஷா. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, மணிரத்தினத்தின் தக்லைஃப் போன்ற படங்களில் நடித்து வருகிறார்..
அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வாமப்ரா உட்பட இரண்டு மலையாள படத்திலும் இவர் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் எப்போதும் பிசியாக இருக்கும் த்ரிஷா. அடுத்தபடியாக சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது பிரபாஸ் நடித்து வரும் ராஜா ஷாப் படத்திற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பிரபாஸுக்கு ஜோடியாக தெலுங்கில் பௌர்ணமி புஜ்ஜிக்காடு போன்ற படங்களில் திரிஷா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.