பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் ரயிலில் ஆபத்தான முறயில் படிக்கட்டில் நின்று கொண்டும் தொங்கி கொண்டும் பயணம் செய்து அதனை தனது ட்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை குறிப்பிட்டு ரயில்வே துறையினர் தனது த்விட்டேர் பக்கத்தில் அறிவுரை செய்துள்ளது.
தமிழ், தெலுகு, ஹிந்தி என்ற பல மொழிகளில் நடித்தும் கொரோனா காலத்தின் மக்களுக்கு பெரும் உதவிகளை செய்தும் பிரபல நடிகரான சோனு சூட் எது செய்தாலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவரது செயல்களுக்கும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் ரயிலில் பயணம் செய்த வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார் அதில் ஓடும் ரயிலில் தொங்கி கொண்டு அவர் பயணித்தார். இதனை பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் வடக்கு ரயில்வே துறை தனது ட்விட்டேர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளது.
प्रिय, @SonuSood
देश और दुनिया के लाखों लोगों के लिए आप एक आदर्श हैं। ट्रेन के पायदान पर बैठकर यात्रा करना खतरनाक है, इस प्रकार की वीडियो से आपके प्रशंसकों को गलत संदेश जा सकता है।
कृपया ऐसा न करें! सुगम एवं सुरक्षित यात्रा का आनंद उठाएं। https://t.co/lSMGdyJcMO
— Northern Railway (@RailwayNorthern) January 4, 2023
வடக்கு ரயில்வே துறையின் ட்விட்டேர் பக்கத்தில் ,நாட்டிலும் உலகிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி. ரயில் படிகளில் பயணம் செய்வது ஆபத்தானது, இந்த வகையான வீடியோ உங்கள் ரசிகர்களுக்கு தவறான செய்தியை அனுப்பலாம்.தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள் சுமூகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை அனுபவிக்கவும். என்று அவருக்கு அறிவுரை செய்துள்ளனர்.