அதுக்குள்ள பஞ்சாயத்தை ஆரம்பித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்..!! 2வது நாளில் நடந்தது..!!
இந்தியாவில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இதுவரையில் ஏழு சீசன்கள் நடந்து முடிந்து இருக்கிறது. எட்டாவது சீசன் ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தமிழ்நாட்டில் அதிக ரசிகர்க உள்ளனர். சுமார் 100 நாட்கள் 18 பிரபலங்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதும், அப்போது அவர்களுக்குள் நடக்கும் சண்டைகள் போன்றவற்றை மக்கலுக்கு தெரியபடுத்தி மேலும் சினிமாவில் நல்லவர்கள் போல் காண்டிக்கொண்டு அந்த வீட்டில் எப்படி இருப்பார்கள் என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ளும் விதத்திலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது.
முக்கியமாக இந்த வீட்டில் போன் கிடையாது, தொலைக்காட்சி கிடையாது எந்த வேலையாக இருந்தாலும் அவர்களாகவே செய்து கொள்ள வேண்டும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிகொண்ட் இருந்தார். ஆரம்பத்தில் கமல் வரும்போது நெட்டிசன்கள் கலாய்த்தார்கள். என்னது கமல் ஹாசன் சின்னத்திரை ஷோவை தொகுத்து வழங்க போகிறாரா..? என்ற ஆச்சரியம் முதல் சீசனில் மக்களுக்கு இருந்தது.
பிறகு போகப்போக கமல் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் சற்று அரசியல் கலந்த பேச்சிலும் ரசிகர்களை கட்டிபோட்டுக் கொண்டார். உலக நாயகனை தவிர யாராலும் இதை தொகுத்து வழங்க முடியாது என்ற அளவுக்கு பெயரை வாங்கி உள்ளார். இருப்பினும் கடந்த 7வது சீசனில் அவர் சற்று ஒருமையில் நடந்துக்கொண்டார் என நெட்டிசன்கள் பேசினர். இந்தச் Nசூழலில் அவர் பிக்பாஸ் சீசன் 8லிருந்து விலகிவிட்டார்.
தற்போது நடக்கும் 8வது பிக்பாஸ் ஷோவின் முதல் எவிக்ட்டாக சாச்சனா வெளியேறி உள்ளார். இதனை தொடர்ந்தி விஜய் டிவி இரண்டாவது ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இந்த முதல் ப்ரோமோவில் பெண்கள் சார்பாக விளையாடுவதற்கு ஆண்கள் வீட்டுக்குள் தன்னை அனுப்புமாறு ஜாக்குலின் கேட்டுள்ளார்.
அதற்கு சுனிதாவோ நீங்கள் போனால் தோத்துவிடுவோம் என்று நக்கலாக சொல்லியது முதல் பஞ்சாயத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பஞ்சாயத்து சரசரவென பெண்கள் மத்தியில் பரவியிருக்கிறது. இதேபோல் விஜய்டிவி இரண்டாவது ப்ரோமோவை வெளியிட்டு உள்ளது.
அதன்படி விஜய்டிவி வெளியிட்டுள்ள இரண்டாவது ப்ரோமோவில் ஜாக்குலின் ஆக்ரோஷமாக பேசுகிறார். அவரை தர்ஷிகாவும், பவித்ராவும் காலய்த்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பவித்ரா பொறுமையை இழந்து, என்னை பாவமாக பாப்பாங்க அப்டினு அனுப்ப வேண்டாம் என சொல்லிவிட்டு அன்ஷிதாவிடம் என்னைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஜாக்குலினோ கத்தாதீங்க பவித்ரா என சொல்லுகிறார். உடனே மெத்தையிலிருந்து எழுந்த பவித்ரா, நான் விளையாடுவேன் அப்டீனு நினைத்தால் அனுப்புங்கள் இல்லை என்றால் அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு அழுதுக்கொண்டே பாத்ரூமுக்குள் செல்கிறார்.
இரண்டாவது நாளெ இப்படு பஞ்சாயத்து நடப்பது ரசிகர்கள் மாத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
– சத்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..