கச்சத்தீவு தொட்ட பாஜக..!! சீனாவின் ஆக்கிரமிப்பு..!!
கடந்த பத்து ஆண்டில் பாஜகவின் சாதனை என்னவென்று கேட்டால், ஆயிரம் ரூபாய் நோட்டு ஒழிப்பு, பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம், ஜி.எஸ்.டி மற்றும் ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பது போன்றவற்றையே மோடி அரசின் சாதனை என்று லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பாஜக அரசின் சாதனைகள் என அண்ணாமலை உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தற்போது, பாஜகவிற்கு எதிரான தேர்தல் பத்திரங்கள் திட்டம் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளை அடுக்கடுக்காக சொல்லலாம். இந்நிலையில், தனக்கு எதிரான பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக புதிய புதிய பிரச்னைகளை பாஜக செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் கச்சத்தீவு விவகாரம்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான ஒப்பந்தத்தை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கச்சத்தீவை 1974-ம் ஆண்டு இலங்கையிடம் கொடுத்தது. கச்சத்தீவுக்கு மாற்றாக, வாட்ஜ் பேங்க் என்ற கடல் பகுதியை இலங்கையிடமிருந்து இந்தியா பெற்றுக்கொண்டது. ஆனாலும், கட்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மீட்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில், கச்சத்தீவு, இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது. அது குறித்த விவரங்களை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து ஆர்.டி.ஐ மூலமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாங்கியுள்ளார். 1961-ம் ஆண்டு, குட்டித் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும் கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு விட்டுத்தர தயார் என்றும் ஆர்.டி.ஐ தகவலில் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொழும்பு நகரில் 1973-ம் ஆண்டு நடைபெற்ற வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு விற்று தர முடிவெடுக்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டில் அப்போதைய முதலமைச்சரிடம் தகவல்களை கொடுத்திருப்பதாக ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, கச்சீத்தீவை காங்கிரஸ் அரசு அலட்சியத்துடன் தாரைவார்த்து கொடுத்திருப்பதும் அம்பலமாகி உள்ளது. இந்த ஆர்.டி.ஐ தகவல்களை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால், தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் தீயாக பரவி பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்திய கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மட்டும் குறிவைத்து தாக்கியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இந்திய கூட்டணி கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ், பாஜகவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக சீன விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்திருக்கிறது. இதனால், கச்சத்தீவு விவகாரம் பா.ஜ.க-வுக்கு பேக்ஃபயர் ஆகியிருக்கிறது. ஏற்கெனவே, மோடி ஆட்சிக்காலத்தில், எல்லைப்பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருப்பதை தொடர்ந்து பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற சிறிய நாடுகளுடனான பிரச்னையில், வாயை மூடி கொண்டிருக்கும் பிரதமர் மோடி, சீனாவுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பது குறிப்பிடதக்கது.
கச்சத்தீவு விவகாரத்தை அண்ணாமலையும், மோடியும் விமர்சனம் செய்து கொண்டிருந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள 30 இடங்களுக்கு சீனா அவர்கள் மொழியில் பெயர் சூட்டிவுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம் :
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளான அருணாச்சல பிரதேசத்தை கபளீகரம் செய்ய சீனா மேற்கொள்ளும் முயற்சிக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்காமல், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்காவும், ஜெர்மனியும் கருத்து தெரிவித்தற்கு, “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்” என ஜெர்மனி தூதரை வரவழைத்து கண்டனத்தைத் தெரிவித்தார்.
ஒரு கருத்து சொன்னதற்காக இவ்வளவு கோபப்பட்ட மத்திய பாஜக அரசு, நம் நாட்டை ஆக்கிரமிக்க முயலும் சீனாவுக்கு எதிராக ஏன் கொந்தளிக்கவில்லை என்று பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..