வேலூரில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெட்டி..? 4 மாவட்டங்களுக்கு பகிர்..!!
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் மின்னனு வாக்குபதிவு இயந்திர கிடங்கில் இருந்து வாக்குபதிவிற்காக வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் பைலட் யூனிட் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவைகள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவைகள் அந்தந்த வட்டாட்ச்சியர்களுக்கு அனுப்ப அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் இன்று கிடங்கை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி முன்னிலை திறக்கப்பட்டு இயந்திரங்களை அனுப்பும் பணியை துவங்கி வைத்தார்.
இதில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைக்கட்டு வேலூர் கேவிக்குப்பம், குடியாத்தம், 4 சட்டமன்ற தொகுதிகளும் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கும் இயந்திரங்கள் சரிபார்க்கபட்டு அனுப்பும் பணி துவங்கியது இதில் பைலட் யூனிட் 1561 கண்ட் ரோல் யூனிட் 1561 ,விவிபாட் ஒப்புகை சீட்டு இயந்திரம் 1692 அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தலுக்காக வாக்கு பதிவு இயந்திரங்கள் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் கண்ட் ரோல் யூனிட் ஆகியவைகள் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு அந்தந்த வட்டாட்ச்சியர் அலுவலக்ங்களுக்கு மாலைக்குள் அனுப்பப்பட்டு பாதுகாக்கப்பாக வைக்கபடும் வாக்குபதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ரேண்டம் எண் போடப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..